Posts

விபூதி சித்தர் ஸ்ரீ சுப்பாராவ் பீடம்

Image
வம்சாவளியின் கதை!   ராஜராஜ சோழனின் பேத்தியும் , ராஜேந்திர சோழனின் இளைய மகளுமான இளவரசி அம்மங்கதேவியைக் கீழை சாளுக்கிய தேசத்தின் இளவரசனும் , ராஜராஜ சோழனின் மகளான இளைய குந்தவை பிராட்டியின் மகன் ராஜராஜ நரேந்திரனுக்குத் திருமணம் செய்து தருகிறார்கள். (மாமன் மகள்- அத்தை மகன் உறவு முறை.) இவர்களுக்கு 1025 ஆண்டில் பிறந்த மகன்தான் முதலாம் குலோத்துங்க சோழன் @ ராஜேந்திர சாளுக்யன். இவன் தாய் வழியில் சோழன் , தந்தை வழியில் வேங்கி நாட்டு கிழக்கு சாளுக்கிய மன்னன்! நம் விபூதி சித்தர் தாத்தாவின் பதிமூன்றாவது மூதாதையர் வேத சம்ரட்சணம் செய்யும் பொருட்டு தஞ்சையின் திருவிடைமருதூர் (எ) மத்யார்ஜுனம் ஊரிலிருந்து திருமணச் சீதனமாகச் சாளுக்கிய தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்! கல்வி கற்ற பண்டிதர்கள் , வித்துவான்கள் , வேத விற்பன்னர்கள் , வைத்தியர்கள் , பாணர்கள் , கலைஞர்கள் என சிலரை ராஜேந்திர சோழன் தேர்ந்தெடுத்து இளவரசியின் திருமணச் சீதனமாக கிபி- 1023 ல் சாளுக்கிய தேசத்திற்கு அனுப்பினான்.   பிற்பாடு அங்கேயே சில நூற்றாண்டுகள் கழிந்தன. அங்கே புலம் பெயர்ந்த ஒரு குலத்தோன்றலாக வந்த சுப்பிரமணியம் , ஹம்பியைத் தல